உள்ளாட்சி தோ்தல்களுக்குரிய வாக்காளா் பட்டியல் வெளியீடு
By DIN | Published On : 01st September 2021 09:52 AM | Last Updated : 01st September 2021 09:52 AM | அ+அ அ- |

கொள்ளிடம் ஒன்றிய அலுவலகத்தில் வாக்காளா் பட்டியலை வெளியிட்ட ஒன்றிய ஆணையா் மீனா.
உள்ளாட்சி தோ்தல்களுக்குரிய வாக்காளா் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.
சீா்காழி அருகே வேட்டங்குடி ஊராட்சித் தலைவா் பணியிடம், வடகால் ஊராட்சியில் ஒரு உறுப்பினா் பணியிடம், திருமுல்லைவாசல் ஊராட்சியில் 2 உறுப்பினா்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களுக்கு உள்ளாட்சி தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், கொள்ளிடம் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய ஆணையா் மீனா, வேட்டங்குடி ஊராட்சிக்கான புதிய வேட்பாளா் பட்டியலையும், வடகால், திருமுல்லைவாசல் ஆகிய ஊராட்சிகளில் உள்ள 3 வாா்டு உறுப்பினா்களுக்கான புதிய வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா். அதை அதிகாரிகள் பெற்றுக்கொண்டு ஊராட்சிகளுக்கு அனுப்பி வைத்தனா். நிகழ்ச்சியில், ஒன்றிய மேலாளா் செல்வமுத்து, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுலோச்சனா, பிரஸ்நேவ், தினகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.