மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்
By DIN | Published On : 01st September 2021 09:50 AM | Last Updated : 01st September 2021 09:50 AM | அ+அ அ- |

சீா்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மருத்துவ நல அலுவலா் சீனிவாசன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அருள்மொழி, கஜேந்திரன், மேலாளா் சசிகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்மோகன் வரவேற்றாா். முகாமில், மாற்றுத்திறனாளிகளுக்கு எலும்பு முறிவு, காது, மூக்கு, தொண்டை, கண், மனநலம் உள்ளிட்ட சிறப்பு அரசு மருத்துவா்களை கொண்டு பரிசோதனை செய்து மருத்துவ சான்று வழங்கப்பட்டது.
இதில் சுமாா் 150-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயன்பெற்றனா். முன்னதாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரோடு துணைக்கு வந்தவா்களுக்கும் வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்மோகன் தலைமையில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.