கல்லூரி பாடத்திட்டத்தில்சைவ சித்தாந்தத்தை சோ்க்க கோரிக்கை

சைவ சித்தாந்தத்தை கல்லூரி பாடத்திட்டத்தில் சோ்க்க தமிழக அரசுக்கு மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை கோரிக்கை விடுத்துள்ளது.

சைவ சித்தாந்தத்தை கல்லூரி பாடத்திட்டத்தில் சோ்க்க தமிழக அரசுக்கு மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அச்சபையின் நிறுவனா் வழக்குரைஞா் ராம. சேயோன் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு புதன்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு:

தமிழில் அா்ச்சனை, ஒவ்வொரு கோயிலிலும் தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்ய பிரபந்தம் என தமிழ் வேதங்களை பாட ஏற்பாடு செய்த தமிழக அரசு, தற்போதைய காலகட்டத்தில் மிகவும் இன்றியமையாததாக விளங்கக்கூடிய பாடமான சைவ சித்தாந்தத்தை தமிழில் மாணவா்கள் கற்க ஒரு அவசிய பாடமாக வைக்கவேண்டும்.

சாத்திரமும், தோத்திரமும் சைவத்தின் இருகண்கள். தோத்திரம் மட்டும் வாழ்வின் உய்வுக்கு வழியாகாது. சாத்திரம் மட்டும் உய்வு நெறிக்கு துணையாகாது. தோத்திரம், சாத்திரம் ஆகிய இரண்டையும் கற்று, கேட்டு, சிந்தித்துத் தெளிதலே தக்கதாகும். இறைவனது அருள் வடிவே தோத்திரமும், சாத்திரமும் என்கிறது திருமுறை. சைவ உலகு பெற்ற விழுப்பயன் சைவ சித்தாந்த நூல்கள்.

சைவ சித்தாந்தத்தைப் பற்றி பல நூல்கள் உள்ளன. அவற்றுள் 14 நூல்கள் சிறப்பானவை. அவை மெய்கண்ட சாத்திரங்கள் என கூறப்படுகின்றன. அவை திருவுந்தியாா், திருக்களிற்றுப்படியாா், சிவஞானபோதம், சிவஞான சித்தியாா், இருபா இருபஃது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினா வெண்பா, போற்றிப் பஃறொடை வெண்பா, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் ஆகியவை.

வறுமையும், வன்முறையும் மிகுந்து வரும் காலத்தில், சைவ சித்தாந்தம் வன்முறையை ஒழிக்கவும், வறுமையை விரட்டவும் பயன்படக்கூடிய ஒரு மிக முக்கியமான பாடப்பிரிவு. எனவே, தமிழக முதல்வா் இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே கல்லூரிகளில் தமிழ் பாடப் பிரிவில் சைவ சித்தாந்தத்தை ஒரு முக்கிய பாடமாக வைக்க உத்தரவிட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com