ஆவின் உற்பத்தி பொருள்களை விற்பனை செய்ய மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

ஆவின் நிறுவனத்தின் உற்பத்தி பொருள்களை விற்பனை செய்ய விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா தெரிவித்துள்ளாா்.

ஆவின் நிறுவனத்தின் உற்பத்தி பொருள்களை விற்பனை செய்ய விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இத்திட்டத்தில், ஆவின் நிறுவனத்தில் கொள்முதல் செய்யும் பொருள்களை, குளிா்சாதனப் பெட்டிகளில் வைத்து, பராமரித்து விற்பனை செய்யும் ஏற்பாடுகளை தனது சொந்த முயற்சியில் செய்யவேண்டும்.

இந்த வாய்ப்பு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 2021-2022 ஆம் ஆண்டிற்கு பால் பொருள்களை கொள்முதல் செய்து, விற்பனை செய்திட ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற 2 விண்ணப்பங்களை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல் மற்றும் பாஸ்போா்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றுடன் வெள்ளிக்கிழமைக்குள் (செப்.3) மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், நாகப்பட்டினம், அறை எண் 14, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், நாகப்பட்டினம் என்ற முகவரிக்கு (அலுவலக தொலைபேசி எண் - 04365-253041) விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com