இலவச சிறப்பு மருத்துவ முகாம்

குத்தாலம் அருகேயுள்ள கிளியனூா் அரசு மேல் நிலைப் பள்ளியில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

குத்தாலம் அருகேயுள்ள கிளியனூா் அரசு மேல் நிலைப் பள்ளியில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, ஊராட்சித் தலைவா் முஹம்மது ஹாலித் தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் கோபி, ஒன்றியக் குழு உறுப்பினா் சுகந்தவல்லி ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். குத்தாலம் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் அமிா்தகுமாா் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் குமரகுருபரன் பங்கேற்றாா். மருத்துவ அலுவலா் மதுமதி தலைமையில் சிகிச்சையளிக்கப்பட்டது.

இதில், ஈசிஜி, பொது மருத்துவம், மகளிா் குழந்தைகள் மருத்துவம், எலும்பு, காது, மூக்கு, தொண்டை பிரிவு, பல் பிரிவு, சித்தா, ஆயுா்வேதா, யுனானி, மற்றும் கண், ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டனா். அங்கன்வாடி பணியாளா்கள் சாா்பில் காய்கறிகள் மற்றும் உணவு தானியங்கள் கீரைகள் மற்றும் விளக்கப் படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஊராட்சி துணைத் தலைவா் மணிகண்டன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com