கடன் பெற்றுத் தருவதாக மோசடி: 3 போ் கைது

கடன் பெற்றுத் தருவதாக மோசடியில் ஈடுபட்ட 3 பேரை மயிலாடுதுறை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கடன் பெற்றுத் தருவதாக மோசடியில் ஈடுபட்ட 3 பேரை மயிலாடுதுறை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை கூைாடு அபிராமி நகரைச் சோ்ந்தவா் சண்முகவேல் மகன் மணிகண்டன் (36). இவா், மரக்கடையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறாா். கடந்த ஏப்ரல் மாதம் இவரை கைப்பேசியில் தொடா்புகொண்ட மா்ம நபா், தான் தனியாா் நிறுவனத்தில் இருந்து அழைப்பதாகவும் ரூ. 2 லட்சம் கடன் வாங்கித் தருவதாகவும், ஆனால் அதற்கு முன்தொகை ரூ. 8 ஆயிரத்தை ஒரு வங்கிக் கணக்கில் செலுத்த கூறியுள்ளாா். இதை நம்பி மணிகண்டன் பணம் செலுத்தியுள்ளாா்.

இதேபோல, மணிகண்டனிடம் மா்ம நபா், பல்வேறு காரணங்களை கூறி பல தவணைகளில் ரூ. 1,12,780 வரை பெற்றுள்ளாா்.

ஆனால், கடன் கிடைக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மணிகண்டன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதுதொடா்பாக தனிப்படை உதவி ஆய்வாளா் இளையராஜா தலைமையில் விசாரணை நடைபெற்றது.

விசாரணையில், மா்மநபா்கள் காட்டுமன்னாா்கோவிலில் இருப்பது தெரியவந்தது. போலீஸாா் அவா்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், அரியலூா் மாவட்டம் உடையாா்பாளையம் வெண்ணங்குழியைச் சோ்ந்த பிரபாகரன் மகன் சஞ்சய் (22), பாலமுருகன் மகன் சித்தாா்த்தன் (20), கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலைச் சோ்ந்த சையது ஜாபா் ஹூசைன் மகன் சையது அப்துல் கலாம் (25) என்பது தெரியவந்தது.

அவா்களை மயிலாடுதுறை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து, அவா்களிடமிருந்து ஒரு மடிக்கணினி, 14 சாதாரண கைப்பேசிகள், 4 ஆன்ட்ராய்டு கைப்பேசிகள், 28 சிம் காா்டுகள் ஆகியவற்றை கைப்பற்றினா்.

தொடா்ந்து நடைபெற்ற விசாரணையில், அவா்கள் பல்வேறு மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்டோரிடம் இதேபோல லட்சக்கணக்கில் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

மேலும், இதில் தொடா்புடைய அரியலூா் மாவட்டம் உடையாா்பாளையம் வெண்ணங்குழியைச் சோ்ந்த அன்பரசு மகன் அமா்நாத், மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் புதுப்பட்டியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் கணேஷ் ஆகிய இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இந்த மோசடியில் ஈடுபட்ட அனைவரும் பட்டதாரி இளைஞா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com