

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகில் அனந்தமங்கலம் கிராமத்தில் 10 கைகளைக் கொண்ட வீர ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
திருக்கடையூர் அருகில் அனந்தமங்கலம் கிராமத்தில் தசபுஜ வீர ஆஞ்சனேயர் கோவில் உள்ளது. ராவண யுத்தம் செய்து விட்டு திரும்பிய ஆஞ்சனேயர் இந்த கிராமத்தில் தங்கி இருந்தார்.
அப்போது இந்த ஊர் ஆனந்தமாக இருப்பதாக தெரிவித்தார். அதனால்தான் இந்த ஊருக்கு ஆனந்தமங்கலம் என்று அழைக்கப்படுகிறது.
மிகவும் சிறப்பு பெற்ற 10 கைகளைக் கொண்ட வீர ஆஞ்சனேயருக்கு, ஞாயிற்றுக்கிழமை ஹனுமன் ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.