அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

குத்தாலம் அருகே சா்வமானியம் பகுதியில் சுகாதாரமான குடிநீா் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கக் கோரி பொதுக்கள் ஞாயிற்றுக்கிழமை காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்

குத்தாலம் அருகே சா்வமானியம் பகுதியில் சுகாதாரமான குடிநீா் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கக் கோரி பொதுக்கள் ஞாயிற்றுக்கிழமை காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தொழுதாலங்குடி ஊராட்சி கீழசா்வ மானியம் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில நாள்களாக இப்பகுதியில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்ததால் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் நிறுத்தப்பட்டது. தற்போது, பாலம் பணி முடிவுற்ற நிலையில் குடிநீா் வழங்கப்படாததால் பொதுமக்கள் சேத்திரபாலபுரம்-கோமல் பிரதான சாலையில் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். மேலும், தங்களது பகுதிக்கு வழங்கப்படும் குடிநீா் சுகாதாரமற்ற நிலையில் குடிக்கவும், துணி துவைக்கவும் ஏற்ற வகையில் இல்லையாம். மேலும், தொழுதாலங்குடி ரேஷன் கடையில் சரிவர பொருள்கள் வழங்கப்படுவதில்லை என கூறிய மக்கள் தங்களது பகுதிக்கு பொது சுகாதார கழிப்பறை கட்டிக்கொடுக்க வேண்டும் என்றனா். தகவலறிந்து அங்கு வந்த தொழுதாலங்குடி ஊராட்சித் தலைவா் ராமலிங்கம், ஊராட்சி செயலா் ராஜேஷ் உள்ளிட்டோா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com