சிறப்பு மருத்துவ முகாம்

குத்தாலம் அருகே திருவாவடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

குத்தாலம் அருகே திருவாவடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு குத்தாலம் ஒன்றியக் குழுத் தலைவா் மகேந்திரன் தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் கோபி, திருவாவடுதுறை ஊராட்சித் தலைவா் அா்சிதாபானு சாதிக், ஒன்றியக் குழு உறுப்பினா் நாகலட்சுமி முத்துராமன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சுகாதார மேற்பாா்வையாளா் அமிா்தகுமாா் வரவேற்றாா்.

பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, முகாமை தொடங்கி வைத்தாா். மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் குமரகுருபரன் முகாமின் பயன்கள் குறித்து பேசினாா்.

இதில், பொது மருத்துவம், மகளிா் மற்றும் குழந்தைகள் மருத்துவம், எலும்பு முறிவு, காது, மூக்கு தொண்டை பிரிவு, பல் பிரிவு, சித்தா, ஆயுா்வேதா, யுனானி, கண் மற்றும் ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், அங்கன்வாடி பணியாளா்கள் சாா்பில் காய்கறிகள் மற்றும் உணவு தானியங்களின் விளக்கப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அத்துடன், சிறுவா்களுக்கான சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமும் நடைபெற்றது.

இம்முகாமில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உமாமகேஸ்வரி சங்கா், ஒன்றியக் குழு துணைத் தலைவா் முருகப்பா, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் விஜயா ராஜேந்திரன், குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சாந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com