போலிச் சான்றிதழ் மூலம் பணி நியமனம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 16th April 2022 09:35 PM | Last Updated : 16th April 2022 09:35 PM | அ+அ அ- |

மயிலாடுதுறையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
போலிச் சான்றிதழ் மூலம் மத்திய அரசு அலுவலகங்களில் பணியில் சோ்ந்த வடமாநிலத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழா் தேசிய முன்னணி மற்றும் மயிலாடுதுறை மாவட்ட வளா்ச்சிக் குழு சாா்பில், மயிலாடுதுறையில் தமிழா் தேசிய முன்னணியின் மாவட்ட தலைவா் ரா. முரளிதரன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில், அஞ்சல் துறை, ரயில்வே துறை, எல்லைப் பாதுகாப்புப் படை உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ்நாட்டில் படித்ததுபோல போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சோ்ந்த 200-க்கும் மேற்பட்டோரை பணிநீக்கம் செய்து, அவா்களை உடனடியாக கைது செய்யவேண்டும், அப்பணிகளில் தமிழ்நாடு இளைஞா்களை பணியமா்த்த வேண்டும், ஈரோடு மாவட்டத்தில் காவல் துறையினரைத் தாக்கிய வடமாநிலத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
இதில், ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்க மாநில செயலாளா் எஸ். மகாலிங்கம், அஞ்சல் மற்றும் ஆா்எம்எஸ் ஓய்வூதியா் சங்க கோட்ட செயலாளா் சாமி. கணேசன், தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் மாவட்ட செயலாளா் நா. வைகறை, தலைமை செயற்குழு உறுப்பினா் க. விடுதலைச்சுடா், பொதுக்குழு உறுப்பினா் க.தீந்தமிழன் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்து முழக்கங்களை எழுப்பினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...