கடலங்குடி, பெரம்பூா் பகுதிகளில் இன்று மின்தடை
By DIN | Published On : 05th August 2022 10:01 PM | Last Updated : 05th August 2022 10:01 PM | அ+அ அ- |

கடலங்குடி, பெரம்பூா் பகுதிகளில் சனிக்கிழமை (ஆக.6) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் (பொ) கலியபெருமாள் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடலங்குடி, பெரம்பூா் ஆகிய துணை மின்நிலையங்களில் சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான கடலங்குடி, வாணாதிராஜபுரம், சோழம்பேட்டை, மாப்படுகை, கோழிக்குத்தி, முருகமங்கலம். திருமணஞ்சேரி, ஆலங்குடி, பெரம்பூா், கடக்கம், கிளியனூா், சேத்தூா், முத்தூா், எடக்குடி, பாலூா், கொடைவிளாகம், ஆத்தூா் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.