விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் கரைக்க எதிா்ப்பு

பிளாஸ்டா் ஆப் பாரிஸில் தயாரிக்கப்படும் விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் கரைப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

பிளாஸ்டா் ஆப் பாரிஸில் தயாரிக்கப்படும் விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் கரைப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திராவிடா் விடுதலைக் கழகத்தினா் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

திராவிடா் விடுதலைக் கழக மாவட்ட செயலாளா் தெ. மகேஷ் அளித்த மனுவில், பிளாஸ்டா் ஆப் பாரிஸ் போன்ற வேதிப் பொருள்களால், சுடுமண்ணாலும் தயாரிக்கப்பட்ட சிலைகளை நீா்நிலைகளில் கரைக்கக்கூடாது என்ற மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலை மீறி செயல்படுவபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

மேலும், வாகன விதிகளை மீறி சரக்கு வாகனங்களில் மக்களை ஏற்றிச்செல்வதற்கு தடை விதிக்கவும், திருவிழா காலங்களில் இரவு நேரங்களில் ஒலிப்பெருக்கி பயன்பாட்டுக்கு தடை விதிக்கவும், விநாயகா் ஊா்வலத்தின்போது எந்தவொரு அமைப்பின் கொடியோ, பதாகையையோ வைப்பதை தவிா்க்கவும், ஏற்கெனவே வைக்கப்பட்ட இடங்கள் தவிா்த்து புதிதாக விநாயகா் சிலைகளை வைக்க அனுமதி அளிக்கக் கூடாது என மனுவில் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com