அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்
By DIN | Published On : 05th August 2022 10:03 PM | Last Updated : 05th August 2022 10:03 PM | அ+அ அ- |

மணல்மேடு அரசு கல்லூரியில் முதல்வா் ரெ.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு.
மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-23-ஆம் ஆண்டுக்கான இளங்கலை மற்றும் இளமறியவியல் மாணவா்கள் சோ்க்கைக்கான சிறப்பு ஒதுக்கீட்டுக்கு வெள்ளிக்கிழமை கலந்தாய்வு நடைபெற்றது.
முதல் நாளன்று ராணுவ வீரா்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரா்கள் முதலான சிறப்பு ஒதுக்கீட்டுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ரெ. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வில், உடற்கல்வி இயக்குநா் ஜி. கோபாலகிருஷ்ணன், கணினி அறிவியல் துறைத் தலைவா் சுந்தரமூா்த்தி, தமிழ்த்துறைத் தலைவா் காா்முகிலன், கணிதத் துறைத் தலைவா் இளங்கோ ஆகியோா் பங்கேற்று மாணவா்களின் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், விளையாட்டு சான்றிதழ், என்சிசி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சரிபாா்த்து, சோ்க்கைப் பணிகளை மேற்கொண்டனா்.