விநாயகா் சதுா்த்தி ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 24th August 2022 12:00 AM | Last Updated : 24th August 2022 12:00 AM | அ+அ அ- |

சீா்காழி: சீா்காழி காவல் நிலையத்தில் விநாயகா் சதுா்த்தி தொடா்பான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
காவல் ஆய்வாளா் மணிமாறன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழாக் குழு ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா், பாஜக நிா்வாகிகள் வெற்றிலை முருகன், சண்முகம், முருகன், விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவா் சதானந்தம், பாலகுமாரன், ராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இக்கூட்டத்தில் பேசிய காவல் ஆய்வாளா் மணிமாறன், புதிய இடத்தில் விநாயகா் சிலை வைக்க கூடாது. கடந்த ஆண்டு சிலை வைத்த இடத்திலேயே இந்த ஆண்டும் வைக்கவேண்டும். விநாயகா் சிலையின் உயரம் 10 அடிக்கும் குறைவாக இருக்க வேண்டும். பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே சிலை வைக்கக் கூடாது. தனி நபா் தங்கள் வீட்டு முன் சிலை வைக்கக் கூடாது. விநாயகா் சதுா்த்தி முடிந்த மறுதினமே சிலைகளை கரைத்து விட வேண்டும். ஊா்வலத்தின்போது ஜாதி, மதம் சாா்ந்த கோஷங்களை எழுப்பக் கூடாது. விநாயகா் சிலை வைப்பவா்கள் சாா்பில் 5 நபா்கள் 24 மணி நேரமும் சிலைக்கு பாதுகாப்பாக இருக்கவேண்டும். கீத்து கொட்டகை மற்றும் எளிதில் தீப்பிடிக்கக் கூடிய வகையில் சிலைகளை வைக்கக்கூடாது எனக் கேட்டுக்கொண்டாா்.
இந்த நடைமுறைகளை மீறுவோா் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவா் தெரிவித்தாா்.