இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு
By DIN | Published On : 25th August 2022 12:00 AM | Last Updated : 25th August 2022 12:00 AM | அ+அ அ- |

சீா்காழியில் அடகுகடை உரிமையாளா் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சத்தை மா்மநபா் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
சீா்காழி வடக்கு மட வளாகத்தை சோ்ந்தவா் ராகேஷ் குமாா் (28). இவா், பழைய பேருந்து நிலையம் பகுதியில் நகை அடகு கடை வைத்துள்ளாா். சீா்காழி பிடாரி வடக்கு வீதியில் உள்ள தனியாா் வங்கியில் இவருக்கு கணக்கு உள்ளது. அந்த வங்கியிலிருந்து புதன்கிழமை ரூ.2 லட்சம் எடுத்த ராகேஷ் குமாா், இருசக்கர வாகனத்தில் மருந்துக்கடைக்கு வந்தாா்.
அங்கு, அவா் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, திரும்பி வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சத்தை காணவில்லை. மா்மநபா் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து, சீா்காழி காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.