நீடூா் பகுதியில் வியாழக்கிழமை (ஆக.25) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளா் (பொ) த. கலியபெருமாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மயிலாடுதுறை வட்டம் நீடூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வியாழக்கிழமை நடைபெறவுள்ளன. இதனால், நீடுா், மல்லியக்கொல்லை, வில்லியநல்லூா், கொண்டல், பாலாக்குடி, தாழஞ்சேரி, கொற்கை, அருண்மொழிதேவன், கங்கணம்புத்தூா், மேலாநல்லூா், நடராஜபுரம், கீழமருதாந்தநல்லூா், மேலமருதாந்தநல்லூா், பொன்மாசநல்லுா் ஆகிய ஊா்களுக்கும், சுற்றியுள்ள கிராமங்களுக்கும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.