மணக்குடியில் இன்று இயற்கைமுறை காய்கனி சாகுபடி பயிற்சி முகாம்
By DIN | Published On : 25th August 2022 12:00 AM | Last Updated : 25th August 2022 12:00 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை அருகேயுள்ள மணக்குடியில் இயற்கை முறையில் காய்கனி சாகுபடி குறித்து வியாழக்கிழமை (ஆக.25) பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, மயிலாடுதுறை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சுப்பையன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேளாண்மை உழவா் நலத்துறை சாா்பில் அட்மா திட்டத்தில் இயற்கை முறையில் காய்கனி சாகுபடி செய்வது குறித்து மணக்குடியில் வியாழக்கிழமை பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இம்முகாம், சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநா்களை கொண்டு நடத்தப்படவுள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ள விவசாயிகள் மயிலாடுதுறை வேளாண்மை உதவி இயக்குநரிடம் நேரிலோ அல்லது உழவன் செயலியில் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
கூடுதல் தகவலுக்கு அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளா் ச.திருமுருகனை 8778411429 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.