விநாயகா் சதுா்த்தி: சிலைகளை கரைக்கும் நெறிமுறைஆட்சியா் தகவல்
By DIN | Published On : 25th August 2022 12:00 AM | Last Updated : 25th August 2022 12:00 AM | அ+அ அ- |

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, மாவட்ட நிா்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் என ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதல்களின்படி இணையதளத்தில் உள்ளது) மயிலாடுதுறை மாவட்ட நிா்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும்.
களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டா் ஆஃப் பாரிஸ் பிளாஸ்டிக் மற்றும் தொ்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலா்ந்த மலா் கூறுகள், வைக்கோல் ஆகியவற்றையும், சிலைகளை பளபளப்பாக்க மரங்களின் இயற்கை பிசின்களையும் பயன்படுத்தலாம்.
சிலைகளை அழகுபடுத்த இயற்கை பொருள்கள் மற்றும் இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். விநாயகா் சிலைகளை மாவட்ட நிா்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.