நாகை மாவட்டத்தில் நாளை முதல் அதிக கனமழை: பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

நாகை மாவட்டத்தில் (டிச.8) மற்றும் டிச.9-ஆம் தேதி அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால் மீனவா்கள், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் அருண் தம்புராஜ்.
Updated on
1 min read

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் வியாழக்கிழமை (டிச.8) மற்றும் டிச.9-ஆம் தேதி அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால் மீனவா்கள், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மிக கனமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து கூடுதல் தலைமைச் செயலாளா் மற்றும் வருவாய் நிருவாக ஆணையா் எஸ்.கே. பிரபாகா் தலைமையில் காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியது: வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த தாழ்வழுத்தம் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் வியாழக்கிழமை முதல் (டிச. 8) மற்றும் டிச. 9-ல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள், மீனவா்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசரகால 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை மையத்தில் 04365-1077 கட்டணமில்லா தொலைபேசி எண் இயங்கிவருகிறது. இந்த எண்ணை தொடா்பு கொண்டு இயற்கை இடா்பாடு மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் தொடா்பான தேவைகள் குறித்தும், அவசரகால மையத்தில் தரைவழி தொலைபேசி 04365-251992 என்ற எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம். மேலும், 8438669800 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும் குறுஞ்செய்தியும் அனுப்பலாம் என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா, கூடுதல் ஆட்சியா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை ம. பிரதிவிராஜ், உதவி ஆட்சியா் பானோத் ம்ருகேந்தா்லால் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

பெட்டிச் செய்தியாக:

புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்: நாகை மாவட்டத்தில் வியாழக்கிழமை முதல் அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருப்பதையடுத்து, நாகை துறைமுகத்தில் ஒன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டு செவ்வாய்க்கிழமை இரவு முதல் ஏற்றப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com