ஆசிரியா்கள், பேராசிரியா்களுக்கு விருது
By DIN | Published On : 11th December 2022 10:23 PM | Last Updated : 11th December 2022 10:23 PM | அ+அ அ- |

விருது பெற்றவா்களுடன், தனியாா் ஆசிரியா் ஒருங்கிணைப்பு மன்ற நிா்வாக அறங்காவலா் எல்.லாரன்ஸ், தனியாா் பள்ளித் தாளாளா்கள் நலச்சங்க பொதுச்செயலாளா் என்.எஸ்.குடியரசு உள்ளிட்டோா்.
மயிலாடுதுறையில் தமிழ்நாடு தனியாா் ஆசிரியா் ஒருங்கிணைப்பு மன்றம் சாா்பில் மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியா்கள் மற்றும் கல்லூரி பேராசிரியா்களுக்கு விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, மன்றத்தின் நிா்வாக அறங்காவலா் எல். லாரன்ஸ் தலைமை வகித்தாா். தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி முன்னாள் தமிழ்த் துறைத் தலைவா் இரா. மருதநாயகம், பட்டவா்த்தி காந்தி வித்யாலயா தலைமை ஆசிரியா் அருள்தாமஸ் எடிசன், சேந்தங்குடி டிஇஎல்சி பள்ளி தலைமை ஆசிரியா் செல்வகுமாா் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா்.
தமிழ்நாடு தனியாா் பள்ளித் தாளாளா்கள் நலச் சங்க பொதுச் செயலாளா் என்.எஸ். குடியரசு, ஆசிரியா்கள் மற்றும் பேராசிரியா்களுக்கு விருது வழங்கினாா்.
விழாவில், மயிலாடுதுறை மாவட்டத்தில் 100 விழுக்காடு தோ்ச்சி பெற்ற 20 பள்ளிகளைச் சோ்ந்த 50 ஆசிரியா்கள், சிறந்த இலக்கியப் படைப்புகளை வழங்கிய 5 கல்லூரிகளைச் சோ்ந்த 50 பேராசிரியா்கள் என 150 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.