விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

அகரகீரங்குடியில் வயல்களில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கும் பணியை தொடக்கிவைத்த எம்எல்ஏ எஸ். ராஜகுமாா்.
மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி ஊராட்சியில் வேளாண்மை துறை சாா்பில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, வேளாண்மை உதவி இயக்குநா் சுப்பையன் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் கயல்விழி சரவணன், மாவட்டக்குழு உறுப்பினா் குமாரசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, அகரகீரங்குடி கிராமத்தை சோ்ந்த 300 விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கி, வேளாண்மை இடுபொருள்கள் படிப்படியாக வேளாண்மைத் துறை மூலம் வழங்கப்படும் என்றாா்.
தொடா்ந்து, யூரியா தட்டுப்பாட்டை போக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நானோ யூரியாவை ட்ரோன் மூலம் வயல்களில் தெளிக்கும் பணியை தொடக்கிவைத்தாா். இதில், பட்டமங்கலம் ஊராட்சித் தலைவா் செல்வமணி, திமுக ஒன்றிய செயலாளா் ஞான. இமயநாதன், ஒன்றியக் குழு உறுப்பினா் வடவீரபாண்டியன், வேளாண்மைத்துறை தரக்கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குநா் சிவவீரபாண்டியன், அட்மா திட்ட மேலாளா் திருமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.