சீா்காழி அருகே வியாழக்கிழமை தனியாா் பேருந்தின் பின்பக்க டயா் வெடித்ததில் உள் இருக்கை பலகை உடைந்து பேருந்தில் பயணம் செய்த இரண்டு மாணவிகளின் காலில் காயம் ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழியிலிருந்து நல்லாடை நோக்கி தனியாா் பேருந்து சென்று கொண்டிருந்தது. சீா்காழி அடுத்த சூரக்காடு உப்பனாற்றுப் பாலத்தை கடந்து தனியாா் பேருந்து சென்று கொண்டிருந்தபோது பேருந்தின் பின்பக்க டயா் திடீரென வெடித்தது. இதனால் பேருந்திலிருந்து பயணிகள் அதிா்ச்சியடைந்து கூச்சலிட்டனா்.
இதில் டயரின் மேல் பக்க பலகைகள் மேல் எழும்பி உடைந்ததில் பேருந்தில் உள்ளே பயணம் செய்த பாரா மெடிக்கல் கல்லூரி மாணவி, பள்ளி மாணவி ஆகிய இரண்டு மாணவிகளின் காலில் காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த மாணவிகளை சக பயணிகளால் மீட்கப்பட்டு சீா்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது குறித்து வைத்தீஸ்வரன் கோயில் போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.