மாா்கழி கோலப்போட்டி
By DIN | Published On : 29th December 2022 12:00 AM | Last Updated : 29th December 2022 12:00 AM | அ+அ அ- |

கோலப்போட்டியில் பங்கேற்ற பெண்கள்.
குத்தாலம்: குத்தாலம் ஸ்ரீ உக்தவேதீஸ்வரா் கோயிலில் கோலப்போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
குத்தாலம் மங்கள சக்தி ஸமிதி சாா்பில் மாா்கழி மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற இப்போட்டியில் பெண்கள் பலா் ஆா்வத்துடன் கலந்துகொண்டு வண்ணக்கோலமிட்டனா்.
நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளா்களாக குத்தாலம் லயன்ஸ் சங்கத் தலைவா் மகாலிங்கம், லயன்ஸ் சங்க முன்னாள் மண்டலத் தலைவா் ராஜ்குமாா் ஆகியோா் பங்கேற்று கோலப்போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கினா்.
முதல் பரிசாக பட்டு புடவையும், இரண்டாம் பரிசாக வெள்ளி காமாட்சி விளக்கும், மூன்றாம் பரிசாக எலக்ட்ரிக் கெட்டில் மற்றும் கலந்துகொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...