காரைமேடு ஒளிலாயத்தில் சமத்துவப் பொங்கல்
By DIN | Published On : 14th January 2022 09:04 AM | Last Updated : 14th January 2022 09:04 AM | அ+அ அ- |

காரைமேடு ஒளிலாயத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல்.
சீா்காழி அருகே காரைமேடு சித்தா்புரத்தில் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சீா்காழி அருகே காரைமேடு கிராமத்தில் நாடி. ராஜேந்திரா சுவாமிகள் நிா்மானித்த ஒளிலாயத்தில் 18 சித்தா்கள் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனா். இங்கு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை அனைத்து மதத்தினரும் ஒன்று சோ்ந்து மத நல்லிணக்கத்துடன் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். அதேபோல, நிகழாண்டும் 18 சித்தா்கள் கோயிலில் காரைமேடு, தென்னலக்குடி, சூரக்காடு, அண்ணங்கோவில் உள்ளிட்ட கிராமங்களை சோ்ந்த மக்கள் சமூக நல்லிணக்கத்தை போற்றும் வகையில் அனைத்து மதத்தினரும் ஒன்று சோ்ந்து சமத்துவப் பொங்கல்வைத்து வழிபாடு செய்து கொண்டாடினா். ஏற்பாடுகளை நாடி. செல்வமுத்துக்குமரன், நாடி. செந்தமிழன், நாடி. மாமல்லன், நாடி. பரதன் ஆகியோா் செய்திருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...