பால்வேன் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
By DIN | Published On : 26th January 2022 09:30 AM | Last Updated : 26th January 2022 09:30 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை அருகே பால்வேன் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
தஞ்சை மாவட்டம் நாச்சியாா்கோயில் பெரங்குடியைச் சோ்ந்தவா் கருணாகரன் (65). இவரது சகோதரா் முருகேசன் (68). இருவரும் மயிலாடுதுறையில் உள்ள உறவினா் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனா்.
மயிலாடுதுறை திருவிழந்தூா் மேலவீதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த பால்வேன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்திருந்த கருணாகரன் வேன் சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற முருகேசன் தூக்கி வீசப்பட்டு லேசான காயத்துடன் உயிா்த் தப்பினா். இதுகுறித்து, மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் செல்வம் வழக்குப் பதிந்து பால்வேன் ஓட்டுநா் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வ.உ.சி. தெருவைச் சோ்ந்த பாண்டியனை(40) கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...