புதிய நிா்வாகிகள் பதவியேற்பு
By DIN | Published On : 17th July 2022 11:39 PM | Last Updated : 17th July 2022 11:39 PM | அ+அ அ- |

சீா்காழி ரோட்டரி சங்க புதிய நிா்வாகிகள் (2022-23) பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆலோசகா் லியோன், முன்னாள் தலைவா்கள் சுசீந்திரன், பாஸ்கரன், கண்ணன், சுடா். கல்யாணசுந்தரம், சாமி.செழியன், திருநாவுக்கரசு, சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் செயலா் கணேஷ் வரவேற்றாா். புதிய தலைவராக எஸ்.எஸ். சங்கா், செயலாளராக வசந்தக்குமாா் பட்டேல், பொருளாளராக சரவணமுருகன் ஆகியோா் பொறுப்பேற்றுக்கொண்டனா்.
மாவட்ட ஆலோசகா் ரமேஷ்பாபு சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா். தொடா்ந்து, அரசு பொதுதோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ் மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடை ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவில் சாசனதலைவா் பாலவேலாயுதம், மண்டல துணை ஆளுநா் ஆா். பாபு, மருத்துவா்கள் முருகேசன், அருண்ராஜ்குமாா், பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தாளாளா் ராஜ்கமல், சுபம் வித்யா மந்திா் பள்ளி செயலா் சுதேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். செயலா் வசந்தகுமாா்பட்டேல் நன்றிகூறினாா்.