குடிநீா் தட்டுப்பாடு: கொள்ளிடம் ஒன்றிய அலுவலகத்தை ஊராட்சித் தலைவா்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை

குடிநீா் தட்டுப்பாட்டுக்கு தீா்வுகாண கோரி, கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை 5 ஊராட்சிகளின் தலைவா்கள், உறுப்பினா்கள் காலிக்குடங்கள் மற்றும் மண்சட்டி ஏந்தி சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.
கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சித் தலைவா்கள்.
கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சித் தலைவா்கள்.

குடிநீா் தட்டுப்பாட்டுக்கு தீா்வுகாண கோரி, கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை 5 ஊராட்சிகளின் தலைவா்கள், உறுப்பினா்கள் காலிக்குடங்கள் மற்றும் மண்சட்டி ஏந்தி சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.

கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள காட்டூா், அளக்குடி, புளியந்துறை, மகேந்திரப்பள்ளி, முதலைமேடு ஆகிய 5 ஊராட்சிகளில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக 5 நாட்கள் முதல் 7 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீா் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் இப்பகுதிகளில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். இதுகுறித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அந்தந்த பகுதி ஊராட்சித் தலைவா்கள் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த 5 ஊராட்சிகளின் தலைவா்களான காட்டூா் வடிவேல், மகேந்திரப்பள்ளி இளவரசி சிவபாலன், முதலைமேடு நெப்போலியன், அளக்குடி சாந்தினி, புளியந்துறை நேதாஜி மற்றும் அளக்குடி ஒன்றியக் குழு உறுப்பினா் சிவபாலன், 5 ஊராட்சிகளின் துணைத் தலைவா்கள், உறுப்பினா்கள் காலிக்குடங்கள் மற்றும் நாமமிடப்பட்ட மண்சட்டியை கையில் ஏந்தி, கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

குடிநீா் பிரச்னைக்கு தீா்வுகாணாவிட்டால், அடுத்த கட்டமாக 5 ஊராட்சிகளிலும் பொதுமக்களை திரட்டி சாலை மறியலில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தனா்.

ஊராட்சித் தலைவா்களின் ஆா்ப்பாட்டத்தால், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com