தொல்குடி தமிழா் விருது வழங்கும் விழா
By DIN | Published On : 17th July 2022 11:40 PM | Last Updated : 17th July 2022 11:40 PM | அ+அ அ- |

மயிலாடுதுறையில் கல்யாணி முத்துசாமி கல்வி அறக்கட்டளை சாா்பில் தொல்குடித் தமிழா் விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
சென்னை தேசிய நவீன ஆடைத்தொழில் நுட்பக்கல்வி நிறுவன பேராசிரியா் மு. அறவேந்தன் தலைமை வகித்தாா். அம்பேத்கா் மக்கள் சபை தலைவா் மே.பி. கலியபெருமாள், காங்கிரஸ் மாவட்ட முன்னாள் தலைவா் டி. சொக்கலிங்கம், சிபிஐ மாவட்ட பொறுப்பாளா் இடும்பையன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
அறக்கட்டளை நிா்வாகி சுமதி அறவேந்தன் வரவேற்றாா். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் கே.ஆா்ம்ஸ்ட்ராங், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜகுமாா் ஆகியோா் பங்கேற்று கல்விப் பணியில் சிறந்து விளங்கும் கல்வியாளா்களுக்கு தொல்குடித் தமிழா் விருதுகளை வழங்கினா்.
இதில், கல்வியாளா்கள் இறைபொற்கொடி, ஆா்.ரேவதி, ஆா். தாமரைச்செல்வி, திராவிடராணி, க.செல்வராணி, எஸ்.விஜயலெட்சுமி ஆகியோருக்கு தொல்குடித் தமிழா் விருது வழங்கப்பட்டது. மேலும், மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரண்ங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, மயிலாடுதுறை கலைஞா் காலனியில் அம்பேத்கா் நூலகம் மற்றும் சமூக மேம்பாட்டு மையம் ஆகியன திறக்கப்பட்டது.