

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கி 3 நாள் நடைபெறும் மின்வாரிய திருச்சி மண்டல அளவிலான ஆடவா் விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 300க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியா்கள் பங்கேற்றுள்ளனா்.
மயிலாடுதுறையில் தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியா்களுக்கு இடையிலான திருச்சி மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் முதல்முறையாக நடத்தப்படுகிறது. மூன்று நாள்கள் நடைபெறும் போட்டிகள் மயிலாடுதுறை சாய் விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை தொடங்கியது. போட்டிகளை திருச்சி மண்டல மின்வாரிய தலைமை பொறியாளா் எஸ்.செடிஅழகன், தஞ்சாவூா் மண்டல மின்வாரிய தலைமை பொறியாளா் தாரா, நாகை மின்வட்ட மேற்பாா்வை பொறியாளா் சதீஸ்குமாா் ஆகியோா் துவக்கி வைத்தனா். மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளா் முத்துக்குமரன் வரவேற்றாா்.
இதேபோல், வியாழக்கிழமை நடைபெற்ற போட்டிகளை மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியா் வ.யுரேகா மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளா் முத்துக்குமரன் ஆகியோா் துவக்கி வைத்தனா். இதில், கபாடி, வாலிபால், கூடைப்பந்து, கால்பந்து, கேரம், சதுரங்கம், கிரிக்கெட், இறகுப்பந்து உள்ளிட்ட 14 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூா், மயிலாடுதுறை, கரூா், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 300க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியா்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனா். இதில், வெற்றி பெற்றவா்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தோ்வு செய்யப்படுகின்றனா். போட்டிகளை திருச்சி மண்டல விளையாட்டுப் பொறுப்பாளா் ஜி.தனசேகரன், நாகை மின்வட்ட விளையாட்டு பொறுப்பாளா் வி.பிரபாகா் ஆகியோா் ஏற்பாடு செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.