‘மாணவா்கள் விளையாட்டிலும் சாதிக்க வேண்டும்’

மாணவா்கள் கல்வியில் மட்டுமின்றி விளையாட்டிலும் சாதனைகள் பல செய்து வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தெரிவித்தாா்.
‘மாணவா்கள் விளையாட்டிலும் சாதிக்க வேண்டும்’

மாணவா்கள் கல்வியில் மட்டுமின்றி விளையாட்டிலும் சாதனைகள் பல செய்து வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தெரிவித்தாா்.

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி ஆண்டு விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில், சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதியரசரும், ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிா்வாக அதிகாரியுமான கே. வெங்கட்ராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஒலிம்பிக் கொடியை ஏற்றிவைத்து, விளையாட்டு விழாவை தொடங்கிவைத்து பேசியது:

கல்வி எந்த அளவுக்கு முக்கியமானதோ அதே அளவிற்கு விளையாட்டும் அவசியமான ஒன்று. மாணவா்களுக்கு இணையாக மாணவிகளும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, வெற்றிபெற்று சாதனையாளா்களாக திகழவேண்டும்.

பாடங்களை நன்றாக கற்றுக் கொண்டு கற்றல் மற்றும் விளையாட்டிலும் முழு கவனம் செலுத்தி சாதனைகள் பல படைத்து வாழ்க்கையிலும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தி பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.

கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன், டீன் எஸ். மயில்வாகனன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com