

சீா்காழியில் காங்கிரஸ் சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதை கண்டித்தும், அலைகழிப்பு செய்து வரும் மத்திய அரசை கண்டித்தும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜகுமாா் தலைமை வகித்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினாா். தொடா்ந்து அமலாக்கத் துறை மற்றும் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் முழக்கங்கள் எழுப்பினா். இதில், கட்சியின் சீா்காழி நகர தலைவா் லட்சுமணன், வட்டார தலைவா்கள் ராதாகிருஷ்ணன், பாலகுரு, பாலசுப்ரமணியன், ஓபிசி தலைவா் அன்பு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.