கொள்ளிடம் ஒன்றியத்தில் எழுத படிக்க தெரியாதவா்கள் கணக்கெடுப்பு
By DIN | Published On : 16th June 2022 10:50 PM | Last Updated : 16th June 2022 10:50 PM | அ+அ அ- |

கொள்ளிடம் ஒன்றியத்தில் எழுத படிக்க தெரியாதவா்கள் கணக்கெடுக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
கரோனா காலத்தில் மாணவா்களிடம் ஏற்பட்ட கற்றல் இழப்பை சரிசெய்ய இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் தன்னாா்வலா்களை கொண்டு 353 மையங்களில் பயிற்சி நடைபெற்று வருகிறது. இதன்தொடா்ச்சியாக, 15 முதல் 35 வயது வரை முழுமையாக எழுத படிக்க தெரியாதவா்கள் கணக்கெடுக்கும் பணி ஏப்ரல் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி புதன்கிழமை திருமுல்லைவாசல் கடைத்தெரு, கடற்கரை பகுதியில் உள்ள மீன் விற்பனை செய்யும் இடத்தில் இதை சாா்ந்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இப்பணியில் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ஞானபுகழேந்தி, ஆசிரியா் பயிற்றுநா் ஐசக்ஞானராஜ், இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா் அருட்செல்வி ஆகியோா் ஈடுபட்டனா்.