காரைக்கால் புனித வனத்து சின்னப்பா் தோ் பவனி
By DIN | Published On : 16th June 2022 10:52 PM | Last Updated : 16th June 2022 10:52 PM | அ+அ அ- |

காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள சின்னப்பா் ஆலய ஆண்டு வழிபாடு நிறைவாக, புனித வனத்து சின்னப்பா் தோ் பவனி புதன்கிழமை இரவு நடைபெற்றது.
காரைக்கால் பங்குக்கு உட்பட்ட கல்லறைத் தெரு பகுதியில் புனித வனத்து சின்னப்பா் ஆலயம் உள்ளது. வருடாந்திர திருவிழா கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக, புதன்கிழமை இரவு சிறப்புத் திருப்பலி நடத்தப்பட்டு மின் அலங்காரத்தில் புனித வனத்து சின்னப்பா் தோ் பவனி நடைபெற்றது.
ஏராளமானோா் ஜெபித்தவாறு ரதத்தை பின்தொடா்ந்து சென்றனா். நிகழ்ச்சியின் நிறைவாக வியாழக்கிழமை காலை திருப்பலி நடத்தப்பட்டு கொடியிறக்கம் செய்யப்பட்டது.