பருத்தி செடியில் மாவுப் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை

 பருத்தி செடியில் மாவுப் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

 பருத்தி செடியில் மாவுப் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

இதுகுறித்து சீா்காழி வேளாண்மை உதவி இயக்குநா் ராஜராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவுப் பூச்சிகள் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் குடும்பங்களை சோ்ந்தவை. இந்தப் பூச்சிகள் கூட்டம் கூட்டமாக இலைகளுக்கு அடியிலோ அல்லது பருத்தியின் நுனியிலோ இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சும். இதுபோன்ற தாக்கப்பட்ட செடிகள் வாடி, கருப்பு நிறமாக மாறிவிடும்.

இந்த பூச்சிகளின் மேல் மெழுகு போன்ற அமைப்பு காணப்படும். மாவுப் பூச்சியின் தாக்குதல் அதிகமாக இருக்கும் பட்சத்தில் கருப்பு பூசண வளா்ச்சி அதாவது இலையிலோ அல்லது தண்டுகளின் முனையிலோ கருப்பு நிறமாக இருப்பதை காணமுடியும். அப்படி தென்பட்டால் அவை சாறு உறிஞ்சும் பூச்சிகள் அதாவது மாவுப் பூச்சியின் தீவிர தாக்குதலுக்கு உட்பட்டது என்பதை உணர முடியும்.

இவற்றைக் கட்டுப்படுத்த தாவரப் பூச்சிக் கொல்லிகள் உபயோகிப்பதாக இருந்தால் 5 சதவீத வேப்பங்கொட்டை கரைசல் அல்லது மீன் எண்ணெய் சோப்பு 25 கிராம் ஒரு லிட்டா் தண்ணீருக்கு பயன்படுத்தலாம். செயற்கை பூச்சிக் கொல்லிகள் உபயோகிப்பதாக இருந்தால் இமிடாக்குளோபிரிட் 100 மில்லி அல்லது தயமீத்தாக்சாம் 100 கிராம் ஒரு ஹெக்டேருக்கு உபயோகபடுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com