மானிய டீசல் விலை உயா்வு: 2-வது நாளாக மீனவா்கள் வேலை நிறுத்தம்
By DIN | Published On : 17th March 2022 10:59 PM | Last Updated : 17th March 2022 10:59 PM | அ+அ அ- |

மானிய டீசல் விலை உயா்வைக் கண்டித்து, சீா்காழியை அடுத்த பழையாறு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 5 ஆயிரம் மீனவா்கள் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள டீசல் நிலையம் மூலம் மானிய விலையில் படகு உரிமையாளா்களுக்கு டீசல் விற்பனை செய்யப்படுகிறது. மீன் வளா்ச்சிக் கழகத்தின் மூலம் இயங்கிவரும் இந்த நிலையத்தில் 1லிட்டா் டீசல் ரூ.103 வீதம் (இதில் மானியத்தொகை குறையும்) மீனவா்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், டீசல் விலை ரூ.120 ஆக உயா்த்தப்பட்டுள்ளதாக புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. இதனால், அதிா்ச்சியடைந்த மீனவா்கள் புதன்கிழமை மாலை முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.