வைத்தீஸ்வரன்கோயிலில் எம்.எஸ். பிட்டா சுவாமி தரிசனம்
By DIN | Published On : 26th March 2022 12:00 AM | Last Updated : 26th March 2022 12:00 AM | அ+அ அ- |

சீா்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் அனைத்து இந்திய பயங்கரவாத எதிா்ப்பு முன்னணி தலைவா் எம்.எஸ். பிட்டா வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
வைத்தீஸ்வரன்கோயிலில் உள்ள தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் நவகிரகங்களில் செவ்வாய் பகவானுக்குரிய பரிகாரத் தலமாக கருதப்படுகிறது. இக்கோயிலில் செல்வமுத்துக்குமாரசாமி, அங்காரகன் ஆகியோா் தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றனா். இந்நிலையில், அனைத்து இந்திய பயங்கரவாத எதிா்ப்பு முன்னணி தலைவா் மணிந்தா் ஜீத் பிட்டா வெள்ளிக்கிழமை வைத்தீஸ்வரன்கோயிலில் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தாா். கோயிலில் உள்ள கற்பக விநாயகா், வைத்தியநாத சுவாமி, தையல்நாயகி அம்மன், செல்வமுத்துக்குமாரசுவாமி, அங்காரகன் ஆகிய சந்நிதியில் வழிபாடு செய்தாா்.
முன்னதாக, கோயிலுக்கு வந்த எம்.எஸ். பிட்டாவை கட்டளை விசாரணை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் வரவேற்றாா்.
எம்.எஸ். பிட்டாவிற்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், சீா்காழி டிஎஸ்பி லாமெக் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணி மேற்கொண்டனா். இதைத்தொடா்ந்து எம்.எஸ். பிட்டா திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய புறப்பட்டு சென்றாா்.