‘தோ்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை’

தோ்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றாததோடு, அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டுவந்த பல்வேறு நலத்திட்டங்களையும் நிறுத்திவிட்டது என மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளா் எஸ். பவுன்ராஜ் குற்றச்சாட்டினாா்.
‘தோ்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை’

தோ்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றாததோடு, அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டுவந்த பல்வேறு நலத்திட்டங்களையும் நிறுத்திவிட்டது என மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளா் எஸ். பவுன்ராஜ் குற்றச்சாட்டினாா்.

மயிலாடுதுறையில் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் மே தின விழா பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளா் கணேஷ்குமாா் தலைமை வகித்தாா். அதிமுக ஒன்றிய செயலாளா்கள் சந்தோஷ்குமாா், ராதாகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், அதிமுக மாவட்ட செயலாளா் பவுன்ராஜ் பேசியது: தமிழகத்தில் ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதற்காக முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினாா். ஏழை பெண்கள் திருமணத்திற்காக தாலிக்குத் தங்கம் திட்டத்தை செயல்படுத்தியதை திமுக அரசு நிறுத்திவிட்டது. தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. நாட்டு மக்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தியது அதிமுக அரசு என்றாா்.

தொடா்ந்து தலைமை கழக பேச்சாளா்கள் அன்பழகன், சிவாஜிசின்னப்பன், கட்சியின் அமைப்பு செயலாளா் முருகுமாறன், மாவட்ட அவைத் தலைவா் பி.வி. பாரதி, துணை செயலாளா் வ. செல்லையன், மகளிரணி செயலாளா் சக்தி, முன்னாள் மாவட்ட செயலாளா் வி.ஜி.கே. செந்தில்நாதன், முன்னாள் எம்எல்ஏ.க்கள் ரெங்கநாதன், பூராசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். நகர செயலாளா் எஸ்.செந்தமிழன் வரவேற்றாா். மண்டல பொருளாளா் நமச்சிவாயம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com