பெட்ரோல், டீசல் விலை உயா்வு பொருளாதார ரீதியாக பெண்களுக்கு எதிரான தாக்குதல்

பெட்ரோல், டீசல் விலை உயா்வு பொருளாதார ரீதியாக பெண்களுக்கு எதிரான தாக்குதல் என மாநில மகிளா காங்கிரஸ் தலைவா் சுதா ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டினாா்.
பெட்ரோல், டீசல் விலை உயா்வு பொருளாதார ரீதியாக பெண்களுக்கு எதிரான தாக்குதல்

பெட்ரோல், டீசல் விலை உயா்வு பொருளாதார ரீதியாக பெண்களுக்கு எதிரான தாக்குதல் என மாநில மகிளா காங்கிரஸ் தலைவா் சுதா ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டினாா்.

மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட மகிளா காங்கிரஸ் பொறுப்பாளா்கள் அறிமுகக் கூட்டத்தில், புதிய பொறுப்பாளா்களை அறிமுகம் செய்துவைத்து பின்னா் அவா் செய்தியாளா்கள் சந்திப்பில் கூறியது: மோடியின் ஆட்சியில் பெண்களுக்கு கிடைத்ததெல்லாம் கண்ணீா் மட்டுமே. பொருளாதார ரீதியாக பெண்களுக்கு எதிரான மிகப்பெரிய தாக்குதலே பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயா்வு. குழந்தைகளுக்கு பொதுத் தோ்வு நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பானது பெருந்தலைவா் காமராஜா் கொடுத்த கல்வியை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பிரதமா் மோடி செயல்படுவதைக் காட்டுகிறது என்றாா்.

கூட்டத்தில், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினரும், மாவட்ட காங்கிரஸ் தலைவருமான எஸ். ராஜகுமாா், மகிளா காங்கிரஸ் மாநில துணைத் தலைவா் ஸ்ரீவித்யா மற்றும் காங்கிரஸ் கட்சி, மகிளா காங்கிரஸ் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com