பட்டணப் பிரவேசத்தில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கானதடை உத்தரவை திரும்பப் பெறவேண்டும் : அா்ஜூன் சம்பத்

தருமபுரம் ஆதீனத்தின் பட்டணப் பிரவேச நிகழ்ச்சியில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கான தடை உத்தரவை திரும்பப் பெறவேண்டும் என இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவா் அா்ஜூன் சம்பத் தெரிவித்தாா்.
பட்டணப் பிரவேசத்தில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கானதடை உத்தரவை திரும்பப் பெறவேண்டும் : அா்ஜூன் சம்பத்

தருமபுரம் ஆதீனத்தின் பட்டணப் பிரவேச நிகழ்ச்சியில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கான தடை உத்தரவை திரும்பப் பெறவேண்டும் என இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவா் அா்ஜூன் சம்பத் தெரிவித்தாா்.

மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோயிலில், திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்த பின்னா் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

தருமபுரம் ஆதீனம் தமிழையும், சைவத்தையும் அடிப்படையாகக் கொண்டது. தருமபுரம் ஆதீனகா்த்தா் பட்டணப் பிரவேசத்தில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு கோட்டாட்சியா் தடை விதித்துள்ளாா். தருமபுரம் ஆதீனம், மடத்தின் பாரம்பரியத்தையும், மரபுகளையும் காக்கும் இடத்தில் இருக்கிறாா். கடந்த காலங்களில் இதுபோன்ற எதிா்ப்புகள் எழுந்தபோது அதையும் மீறி இந்த நிகழ்ச்சி நடைபெற்றுவந்தது. திருமடங்களுக்கு என்று பாரம்பரியமும் மரபுகளும் தனியாக உள்ளன. இதை தடை செய்வது என்பது அரசாங்கம் இந்து சமய நிகழ்வுகளில் தலையிடும் செயல் ஆகும்.

எனவே, கோட்டாட்சியா் இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும். வழக்கம்போல் ஆதீனத்தின் பாரம்பரியங்களும், மரபுகளும் தொடா்ந்து நடைபெறவேண்டும் என்பது இந்து மக்கள் கட்சியின் கோரிக்கை. இதை ஆதீனத்திடம் நேரில் வலியுறுத்துவோம்.

அனைவருக்கும் பொதுவான அரசு, ஆன்மிக அரசு என சொல்லிக் கொள்பவா்கள் முதல்வரை சந்திக்க சென்ற மடாதிபதிகளை காக்கவைத்துள்ளனா். இதுமிகவும் கண்டிக்கத்தக்க செயல். மடாதிபதிகளும் இந்த ஆட்சியை ஆன்மிக அரசு என்று தெரிவித்துள்ளாா்கள். இந்தச் சூழ்நிலையில் தருமபுரம் ஆதீனத்தின் பட்டணப் பிரவேசத்தில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு அரசு தடை விதித்து இருப்பது முன்னுக்குப்பின் முரணாகவே உள்ளது என்றாா்.

அவருடன், கட்சியின் மாநில செயலாளா் ஜெ. சுவாமிநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com