தருமபுரம் ஆதீன குருமூா்த்த விமானங்களில் பொருத்தப்பட்டிருந்த செம்பு, பித்தளை கலசங்கள் காணாமல்போனது குறித்து மயிலாடுதுறை போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் திருமஞ்சன வீதியில் ஆதீனகா்த்தா்களாக இருந்து மறைந்தவா்களின் குருமூா்த்தம் அமைந்துள்ளது. இங்கு மே 2-ஆம் தேதி 20-ஆவது குருமகா சந்நிதானத்துக்கு குருபூஜை நடைபெற்றது. மறுநாள் ஆதீன ஊழியா்கள் அங்கு சென்று பாா்த்தபோது, குருமூா்த்தத்தின் விமானத்திலிருந்த 2 கலசங்கள், முகப்புப் பகுதி நுழைவாயிலின் மேல் பகுதியில் இருந்த கலசங்கள் என மொத்தம் 5 கலசங்கள் காணாமல் போயிருந்தன. செம்பு மற்றும் பித்தளை ஆகியவற்றால் செய்யப்பட்ட இந்த 5 கலசங்களின் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, ஆதீன பொதுமேலாளா் கோதண்டராமன் (64) அளித்த புகாரின்பேரில், மயிலாடுதுறை காவல் உதவி ஆய்வாளா் சேதுபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா். மேலும், போலீஸாா் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.