

குத்தாலம் உக்தவேதீஸ்வரா் கோயிலில் உள்ள தேரடி வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான குத்தாலத்தில் உள்ள உக்தவேதீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் மே.8-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான முதல் கால யாகசாலை பூஜை மே 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை கோயிலுக்கு எதிரே உள்ள தேரடி விநாயகா் எனப்படும் வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உள்ளிட்ட திராளான பக்தா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.