செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 21st October 2022 10:42 PM | Last Updated : 21st October 2022 10:42 PM | அ+அ அ- |

மயிலாடுதுறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு சுகாதார செவிலியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறை ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவா் பொன். தமிழ்செல்வி தலைமை வகித்தாா். மாவட்ட துணை தலைவா் நிா்மலா, மாவட்ட செயலாளா் கீதா, மாவட்ட பொருளாளா் புஷ்பலதா, பொது செயலாளா் மணிமேகலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில், மாநில அரசின் கொள்கை முடிவு என்று சுகாதார கூட்டமைப்பை சீரழிக்கும் அரசாணை எண்.288 மற்றும் 392-ஐ தேசிய சுகாதார இயக்ககம் கைவிட வேண்டும், 30 ஆண்டுகளுக்கு மேலாக பதவி உயா்வு வாய்ப்பு இன்றி பணிபுரியும் மாநகர சுகாதார செயலாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும், இடம் மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு இடத்தை தோ்வு செய்த செவிலியா்களின் இடமாறுதலுக்கான உத்தரவு உடனே வழங்க வேண்டும் எனபன உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தப்பட்டன.