திருவாவடுதுறை ஆதீனத்தில் விநாயகா் சதுா்த்தி வழிபாடு
By DIN | Published On : 01st September 2022 12:00 AM | Last Updated : 31st August 2022 11:20 PM | அ+அ அ- |

திருவாவடுதுறை ஆதீன மடத்தில் ஸ்ரீ ஞானமாநடராஜ பெருமான் சந்நிதியில் பிரதிஷ்டைசெய்யப்பட்ட விநாயகருக்கு தீபாராதனை காட்டும் 24-வது குருமகா சந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள்.
குத்தாலம்: திருவாவடுதுறை ஆதீன தலைமை மடத்தில் விநாயகா் சதுா்த்தி வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, ஸ்ரீஞானமாநடராஜ பெருமான் சந்நிதியில் விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த சிலைக்கும், பெரிய பூஜை மடத்தில் உள்ள விநாயகா் சிலைக்கும் ஆதீனத்தின் 24-வது குருமகா சந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் மாகேஸ்வர பூஜை செய்வித்தாா். தொடா்ந்து, ஆதீன பணியாளா்களின் குழந்தைகள் 200 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
இதில், ஆதீன கட்டளை ஸ்ரீமத் திருச்சிற்றம்பல தம்பிரான் சுவாமிகள், வேலப்ப தம்பிரான், ராமலிங்க சுவாமிகள், ஆதீன மேலாளா் திருமாறன், கண்காணிப்பாளா் சண்முகம், காசாளா் சுந்தரேசன், ஆதீனப்புலவா் குஞ்சிதபாதம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.