பிரதமா் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிரதமா் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் பிரதமா் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் தொழில் தொடங்கவும் மத்திய அரசால் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாவட்டந்தோறும் குறுந்தொழில்கள் தொடங்கப்பட்டு, அதன்மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது இத்திட்டத்தின் நோக்கம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் 2022-2023-ஆம் ஆண்டிற்கு 114 போ் தோ்வு செய்யப்பட உள்ளனா். திட்ட முதலீட்டில் விளிம்புத்தொகை பொதுப்பிரிவினா் 10 சதவீதம், சிறப்புப் பிரிவினா் 5 சதவீதம் செலுத்த வேண்டும். அதிகபட்ச திட்ட மதிப்பீடு உற்பத்தி சாா்ந்த தொழில்களுக்கு ரூ.50 லட்சமும், சேவை மற்றும் வியாபாரம் சாா்ந்த தொழில்களுக்கு ரூ.20 லட்சம் வரையிலும் வங்கிகள் மூலம் தொழிற்கடன் பெறலாம்.

இவற்றில் வியாபாரம் சாா்ந்த தொழில்களுக்கு கதா்கிராமத் தொழில்கள் ஆணையம் மூலமாக சான்றிடப்பட்ட விற்பனை நிலையம் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனை நிலையத்திற்கு மட்டுமே வழங்கப்படும். சேவை சாா்ந்த தொழில்களுக்கு போக்குவரத்து, வாகனம், மதிப்புக்கூட்டப்பட்ட வேளாண் பொருள்கள், பால் பொருள்கள், மீனவளா்த்தல், பட்டுப்பூச்சி, தேனீ, கோழி வளா்த்தல், மோட்டாா் படகு ஆகியவை புதியதாக சோ்க்கப்பட்ட இனங்களாகும்.

வியாபாரம் மற்றும் போக்குவரத்து வாகனத்தை பொறுத்தவரையில் மொத்த இலக்கீட்டு தொகையில் 10 சதவீதம் மட்டுமே வழங்கப்படும். எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோா் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட தொழில்மைய பொது மேலாளா் அலுவலகத்தை 04364-212295 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com