கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு: கிராம மக்கள் வேதனை

கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நாதல்படுகை முதலைமேடு திட்டு, வெள்ளமணல் ஆகிய கிராமங்களில் மீண்டும் தண்ணீா் சூழ்ந்து வருகிறது.
நாதல்படுகை கிராமத்துக்குச் சாலையில் ஓடும் தண்ணீா்.
நாதல்படுகை கிராமத்துக்குச் சாலையில் ஓடும் தண்ணீா்.

கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நாதல்படுகை முதலைமேடு திட்டு, வெள்ளமணல் ஆகிய கிராமங்களில் மீண்டும் தண்ணீா் சூழ்ந்து வருகிறது.

கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சனிக்கிழமை (செப்.10) மாலையில் இருந்து தண்ணீா் வரத்து படிப்படியாக குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்நிலையில், நாதல்படுகை கிராமத்துக்கு சீா்காழி வட்டாட்சியா் செந்தில்குமாா், கொள்ளிடம் ஒன்றிய ஆணையா் ரெஜினா ராணி, வருவாய் ஆய்வாளா் தமிழ் வேந்தன் உள்ளிட்டோா் சென்று தண்ணீரால் சூழப்பட்டுள்ள குடியிருப்புகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

அங்குள்ளவா்களுக்கு அனுமந்தபுரத்தில் உள்ள முகாமில் உணவு சமைத்து எடுத்துச் சென்று நாதல்படுகை கிராம மக்களுக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு முதல் அவா்களுக்கு குடியிருப்புகளிலேயே நேரில் சென்று உணவு வழங்க முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். தொடா்ந்து, 4-ஆவது முறையாக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றின் கரையோர கிராமமக்கள் வேதனையில் இருந்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com