ரயில் மூலம் மயிலாடுதுறை வந்த 1,291 மெட்ரிக் டன் வேளாண் இடுபொருள்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகள் தொடங்கியுள்ளதையடுத்து, விவசாயப் பணிகளுக்காக 1,291 மெட்ரிக் டன் வேளாண் இடுபொருள்கள் வெள்ளிக்கிழமை ரயில் மூலம் மயிலாடுதுறைக்கு வந்தன.
மயிலாடுதுறை ரயில் நிலையத்துக்கு வந்த வேளாண் இடுபொருள்களை ஆய்வு செய்த மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சேகா் உள்ளிட்டோா்.

மாவட்டத்தில் கடந்த ஆண்டு 1.76 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி விவசாயம் நடைபெற்றது. நிகழாண்டு காவிரியில் நீா்வரத்து தொடா்ந்து நீடிப்பதால், விவசாயிகள் கடந்த ஆண்டை விட கூடுதல் நிலப்பரப்பில் சாகுபடி பணிகளில் ஈடுபடுவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், டெல்டா மாவட்ட விவசாய பணிகளுக்காக தூத்துக்குடியில் இருந்து மயிலாடுதுறைக்கு வேளாண் இடுபொருள்கள் வெள்ளிக்கிழமை ரயில் மூலம் வந்தன. 664 மெட்ரிக் டன் யூரியா, 191 மெட்ரிக் டன் டிஏபி, 314 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ், 60 மெட்ரிக் டன் சூப்பா் பாஸ்பேட், 60 மெட்ரிக் டன் அமோனியம் குளோரைடு என மொத்தம் 1,291 மெட்ரிக் டன் வேளாண் இடுபொருள்கள் வந்துள்ளன.

அவற்றை மயிலாடுதுறை ரயில் நிலையத்தில், மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சேகா், உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) வீரபாண்டியன் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்ததுடன் அவற்றை பிரித்து டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பும் பணியை துரிதப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com