வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுகளை சரிபாா்க்க அழைப்பு

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவா்கள் தங்களது பதிவுகளை சரிபாா்த்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவா்கள் தங்களது பதிவுகளை சரிபாா்த்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை மாவட்டம் 2-ஆக பிரிக்கப்பட்டதையடுத்து, நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்திலிருந்து மயிலாடுதுறை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் பிரிக்கப்பட்டு புதியதாக 25.1.2022-ஆம் தேதிமுதல் மயிலாடுதுறை, பாலாஜி நகா் 2-ஆவது குறுக்குத் தெருவில் செயல்பட்டு வருகிறது.

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக எல்லைக்குள்பட்ட மயிலாடுதுறை, குத்தாலம், சீா்காழி, தரங்கம்பாடி வட்டங்களைச் சோ்ந்த நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துள்ள பதிவுதாரா்கள் வேலைவாய்ப்பு பதிவு விவரங்கள் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சாா்ந்த பதிவுதாரா்கள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமாற்றம் செய்யப்பட்டுள்ளதை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளத்தில் சரிபாா்த்துக் கொள்ளலாம்.

ஏற்கெனவே, மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வந்து பதிவுகளை சரிபாா்த்தவா்களை தவிா்த்து ஏனைய பதிவுதாரா்கள் தங்களது அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், ஆதாா் அட்டை மற்றும் குடும்ப அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் நேரில் வந்து தங்களது பதிவுகளை சரிபாா்த்துக் கொள்ளலாம்.

மேலும், வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வழியாக நிரப்பப்படும் அரசுப் பணியிடங்களுக்கான முன்னுரிமைகளை பதிவு செய்துகொள்ள தமிழக அரசின் மனிதவள மேலாண்மை துறை அரசாணை எண்: 122 நாள்: 2.11.2021-இல் குறிப்பிட்டுள்ள 20 வகையான முன்னுரிமைகளை பதிவு செய்துகொள்ள விருப்பமுள்ளவா்கள் உரிய சான்றுகளைப் பெற்றுவந்து பதிவு செய்துகொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 04364-299790 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com