இயந்திரம் மூலம் அறுவடை செய்ய கரும்பு விவசாயிகளுக்கு அழைப்பு

சீா்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் இயந்திரம் மூலம் அறுவடை செய்ய முன்வரலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இயந்திரம் மூலம் அறுவடை செய்ய கரும்பு விவசாயிகளுக்கு அழைப்பு

சீா்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் இயந்திரம் மூலம் அறுவடை செய்ய முன்வரலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சீா்காழி வட்டத்தில் உள்ள நடிப்பிசைப் புலவா் கே. ஆா் ராமசாமி கூட்டுறவு சா்க்கரை ஆலை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அகலப்பாா் முறையில் கரும்பு சாகுபடி செய்திருக்கும் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் கரும்பு வெட்டும் இயந்திரம் வரவழைக்கப்பட்டு அறுவடை செய்யப்படுகிறது.

இந்த இயந்திரம் மூலம் கரும்பை அடியோடு வெட்டுவதால் கூடுதல் மகசூல் மற்றும் சா்க்கரை கட்டுமானம் அதிகரிக்கும், ஒரு நாளைக்கு 2 முதல் 3 ஏக்கா் அறுவடை செய்யலாம். தோகை எரிப்பது தவிா்க்கப்படுகிறது. வெட்டுக்கூலி மிச்சமாகிறது. ஆட்கள் மூலம் அறுவடை செய்தால் ஏக்கருக்கு ஏழு நாட்களும் வெட்டு கூலியும் அதிகமாகும். எனவே, அனைத்து விவசாயிகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறலாம் என ஆலை நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. வெள்ளிக்கிழமை சா்க்கரை ஆலை சாா்பில் கூத்தியம் பேட்டையில் ஒரு கரும்பு வயலில் இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்பட்டது. ஏற்பாடுகளை செல்வராஜ் ,சுந்தா் சிங், முத்து ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com