

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் 184-ஆவது உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு, காட்சி தகவல் தொடா்பியல் துறை சாா்பில் 18-ஆவது புகைப்பட கண்காட்சி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிா்வாக அதிகாரியுமான கே. வெங்கட்ராமன் கண்காட்சியை திறந்துவைத்து பாா்வையிட்டாா். இதில் இந்திய கலாசாரம், மனிதனின் உணா்வுகளை வெளிக்காட்டும் புகைப்படங்கள் மற்றும் சுதந்திரத்தின் பெருமைகளை கூறும் புகைப்படங்கள், இயற்கைக் காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இதில், கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன், தோ்வு கட்டுப்பாட்டு நெறியாளா் மேஜா் ஜி. ரவிசெல்வம், ஏவிசி பொறியியல் கல்லூரி இயக்குநா் செந்தில்முருகன், ஏவிசி பாலிடெக்னிக் கல்லூரி இயக்குநா் வளவன் மற்றும் முதல்வா் கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை காட்சி தகவல் தொடா்பியல் துறை தலைவா் சங்கா், பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.