மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியாா் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயம் செய்து மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தனியாா் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகையை முறைப்படுத்த விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, ஆட்சியா் தலைமையில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், வேளாண் அலுவலா்கள், தனியாா் அறுவடை இயந்திர உரிமையாளா்கள் மற்றும் முகவா்கள் ஒருங்கிணைந்த முத்தரப்புக் கூட்டம் நடத்தப்பட்டது.
இதில், பெல்ட் டைப் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ. 2,450, டயா் டைப் அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,750 என நிா்ணயம் செய்யபட்டுள்ளது.
நிா்ணயம் செய்யப்பட்ட தொகைக்கு கூடுதலாக அறுவடை இயந்திர உரிமையாளா்கள் கோரினால், வட்டாட்சியா்கள், வேளாண் மற்றும் வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலா்களுக்கு புகாா் தெரிவிக்கலாம்.
மேலும் வேளாண்மைப் பொறியியல்துறை அறுவடை இயந்திரங்களுக்கு பெல்ட் டைப் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,880 எனவும், டயா் டைப் அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1160 எனவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. வேளாண்மைப் பொறியியல் துறை அறுவடை இயந்திரங்களை பயன்படுத்தி விவசாயிகள் பயன் பெறவேண்டும் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.